பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார் சுமந்திரன் - Yarl Voice பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார் சுமந்திரன் - Yarl Voice

பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார் சுமந்திரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள  கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரை மாற்றுவதாக சென்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பேச்சாளரை மாற்றுவது தற்போது பிற்போடப்பட்டிருக்கிறது. 

கடந்த ஐந்து வருடம் நான் இந்தப் பதவியில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. ஆகையினாலே வேறு ஒருவர் இந்த பதவியை வகிக்க வேண்டுமென்று நான் கோரியிருந்தேன்.

ஆந்தக் காரணத்தினால் சிறிதரனுடைய பெயரை நான் முன்மொழிந்திருக்கிறேன். ஆனால் அது இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு வேறு ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். 

இதற்கு மேல் பாரர்ளும்ன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய விடயங்களை நான் வெளியில் சொல்வதற்கில்லை. நான் ஏன் விலகினேன், எதற்காக எதிர்ப்புத் தெரிவித்தேன் என்றதற்கான காரணங்களை பாராளுமன்றக் குழக் கூட்டத்தில் தான் சொல்லுவேன். அதனைவிடுத்து என்ன என்பதை ஊடகங்களுக்கு நான் சொல்லப் போறதில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post