மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று தொடர்பில் ஐனாதிபதி தலைமையில் ஆராய்வு - Yarl Voice மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று தொடர்பில் ஐனாதிபதி தலைமையில் ஆராய்வு - Yarl Voice

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று தொடர்பில் ஐனாதிபதி தலைமையில் ஆராய்வு





அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். 

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் பணித்துள்ளேன். 

கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில், இரண்டு நாட்களுக்குள் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று மாலை ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவற்றை நான் குறிப்பிட்டேன். 

கொவிட் தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை பின்பற்றுதல் மக்கள் மத்தியில் குறைவடைந்ததே நோய் தொற்றியதற்கான அடிப்படை காரணமாகும் என்பதனை வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரச்சார நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதனை நான் இன்று சுட்டிக்காட்டினேன்.

சாதாரணமாக கொவிட் நோய்த் தொற்று உள்ளதனை பொதுமக்கள் மறந்துள்ளதையிட்டு என்னுடைய கவலையையும் நான் வெளிப்படுத்தினேன்.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து நிறுவனங்களிலும் தெரிவின் அடிப்படையில் PCR பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக குழுக்கள் அடிப்படையில் அதிகமானோர் தொழில் புரியக்கூடிய நிறுவனங்களில் PCR பரிசோதனையை தெரிவின் அடிப்படையில் அடிக்கடி நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், தொழிற்சாலைகளில் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மீண்டும் அதனைத் தடுப்பதில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு - ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்புள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை நான் உத்தரவாக இட்டுள்ளேன்.

காவற்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட பாரிய முன்னெடுப்புக்களை நான் இன்று நினைவுபடுத்தியதுடன், மீண்டும் அந்த வேலைத்திட்டங்களை பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினேன். 

நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தின் ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தெரிவின் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தனியார் துறையினரின் பங்களிப்புடன் நிறுவனங்களின ஊழியர்களைத் தெரிவின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் இன்று சுட்டிக்காட்டினேன். 

கொவிட் நோய்த் தடுப்புக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பல விடயங்களை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை என்பதனை காவற்துறையினர் இன்று குறிப்பிட்டனர்.

தற்போதைய சட்டதிட்டங்களை - கொவிட் தடுப்பை நோக்கமாகக் கொண்டு வர்த்தமானியில் வெளியிடும் அவசியம் பற்றியும் இன்று கலந்துரையாடப்பட்டது. 

மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்காகவும் சுதேச மருந்துகளை பயன்படுத்தல் தொடர்பாகவும்  இன்று கலந்துரையாடப்பட்டது. 

அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, எனது பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post