இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டுவந்த கி.துரைராஜசிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது. இந்நிலையில் ப.சத்தியலிங்கம் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment