மனநலம் பாதிகப்பட்டவர் போல பிதட்டுகிறார் பொன்சேகா - சபா குகதாஸ் கண்டனம் - Yarl Voice மனநலம் பாதிகப்பட்டவர் போல பிதட்டுகிறார் பொன்சேகா - சபா குகதாஸ் கண்டனம் - Yarl Voice

மனநலம் பாதிகப்பட்டவர் போல பிதட்டுகிறார் பொன்சேகா - சபா குகதாஸ் கண்டனம்முன்னாள் இரானுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா மன நலம் பாதிக்கப்பட்டவர் போன்று பிதட்டுவதாக கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பதாவது..

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  பாராளுமன்றில் உரையாற்றும் போது தலைவர் பிரபாகரன் குடும்பத்தை வசை பாடினார் அவரது இச் செயற்பாடு மனநலம் பாதித்தவர் பிதட்டுவது போல இருந்தது. 

கடந்த காலங்களில் பிரபாகரன் ஒரு மாவீரன் அவரது காலில் இருந்து உதிர்ந்து விழும் முடிக்கு கூட எவருக்கும் தகுதி இல்லை. ஒழுக்கமான இராணுவ கட்டமைப்பை வழிநடாத்திய வீரன் என்றவாறு புகழாரம் சூடியவர் தான் இந்த பொன்சேகா.

ஆனால்  தற்போது தன்னுடைய ஆழ் மனது எண்ணத்தை வெளிப்படுத்தினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு விட்டாதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

 உண்மையில் பொன்சேகா 2009 இறுதிப்போரை நடாத்திய  ஒரு போர்க்குற்றவாளி. இதனை ஐ நா மனிதவுரிமைப் பேரவை வெளியிட்ட பட்டியலில் இவரது பெயரும் உள்ளக்கப்பட்டுள்ளது. 

போர்க் இறுதிப்பகுதியில் பிரபாகரன் அவர்களின் இரண்டாவது மகன் பன்னிரண்டு வயதுப் பாலகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இராணுவ பதுங்கு குழியில் இருந்து பிஸ்கட் சாப்பிடும் காட்சியில் அவன் சாதாரண அரைக் காற்சட்டையுடன்  சாரம் தோழில் போட்டவாறான நிலையில் உள்ள காட்சி அதன் பின்னர் அதே காற்சட்டையுடன் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்ட அடையாளங்களுடன் உள்ள காட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகமான சனல் 4 வெளியாகியது.

 இந்த உண்மையை மறைத்து இன்று பொய்யான ஒரு புரளியை கிழப்பியுள்ளார். அதாவது பாலச்சந்தின் சிறுவர் படையணி தளபதி என்று. உண்மையாக தலைவர் பிரபாகரனின் முத்த மகன் மகள் இருவரும் போராளிகள் எல்லோருக்கும் தெரிந்த  விடையம். போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை இணைக்கும் போது பிரபாகரன் தன் வீட்டில் இருவரை இணைத்தார் ஆனால் அவரது மனைவியை இளைய மகனை பொய்யாக சித்தரிப்பது சரத் பொன்சேகாவின் வங்குறோத்து அரசியலை வெளிப்படுத்தியுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post