ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சிவஞானம் கண்டனம் - Yarl Voice ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சிவஞானம் கண்டனம் - Yarl Voice

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சிவஞானம் கண்டனம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் (12.10.2020) முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன்இகணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் மீது குறித்த பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்களினால் கடுமையாக தாக்கப்படதுடன் அவர்களின் புகைப்படகருவிகள் என்பன பறிக்கப்பட்டு புகைப்படம் மற்றும் காணொளிகள் என்பன அழிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறன செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது ஊடகசுகந்ததிரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கின்றோம்.

எனவே குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களை பொலிசார் உடடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post