யாழில் கொரோனா அடையாளம் காணப்பட்ட பெண் பயணம் செய்த பஸ் விபரம் வெளியீடு - குறித்த பஸ்களில் பயணம் செய்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் - Yarl Voice யாழில் கொரோனா அடையாளம் காணப்பட்ட பெண் பயணம் செய்த பஸ் விபரம் வெளியீடு - குறித்த பஸ்களில் பயணம் செய்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் - Yarl Voice

யாழில் கொரோனா அடையாளம் காணப்பட்ட பெண் பயணம் செய்த பஸ் விபரம் வெளியீடு - குறித்த பஸ்களில் பயணம் செய்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல்
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த பெண் மினுவாங்கொடையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த பஸ் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே குறித்த பெண் பயணம் செய்த பஸ்சில் பயணம் மேற்கொண்டவர்கள் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சுகாதார பணிமனையை தொடர்பு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோரோனாவால் பாதிக்கப்பட்ட பெண், கொழும்பு புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு Ran Silu - WP ND 6500 என்ற பேருந்தில் பயணித்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்.4) அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து  NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.
எனவே கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்படி இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.The tested positive Girl from Pungudithevu travelled in the following buses

From Colombo Pettah to Jaffna

Name of the bus:Ran Silu
Reg No WP ND 6500

From Colombo Pettah
03/10/2020  8.30pm
Arrival at Jaffna bus stand
04/10/2020 5Am

From Jaffna to Pungudithevu

Name of the bus :Matha
Reg No NP ND 8790 

From Jaffna bus stand 
04/10 /2020 5 Am
Arrival at Pungudithevu 
04/10 /2020 7am 

Anybody who traveled in these busses please give your details to the hot line No 021 222 6666. 

Dr Ketheswaran PDHS NP

0/Post a Comment/Comments

Previous Post Next Post