யாழில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்ப நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice யாழில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்ப நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

யாழில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்ப நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்புகொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு( IDH) மாற்றப்படவுள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இந்தப் பெண், நேற்றைய தினம் புங்குடுதீவுக்குத் திரும்பியிலிருந்தார்.

அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும்  பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post