தீபாவளியை வீட்டில் இருந்தே கொண்டாடுங்கள் - வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் வேண்டுகோள் - Yarl Voice தீபாவளியை வீட்டில் இருந்தே கொண்டாடுங்கள் - வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் வேண்டுகோள் - Yarl Voice

தீபாவளியை வீட்டில் இருந்தே கொண்டாடுங்கள் - வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் வேண்டுகோள்எதிர்வரும் 14ஆம் திகதி இந்துமக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இச் சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. கொரோனா தொற்று நோயினால் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன. 

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. 

எனவே இத்தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். 
எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது இத்தீபாவளிப் 
பண்டிகையைக் கொண்டாடுவோம். 

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாண

0/Post a Comment/Comments

Previous Post Next Post