இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனாவால் மரணம்- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு - Yarl Voice இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனாவால் மரணம்- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு - Yarl Voice

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனாவால் மரணம்- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு




இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுடன் நியுமோனியா நிலைமை ஏற்பட்ட காரணத்தால் இவரது மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாச கோளாறு மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரும் கொவிட் 19 தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, 55-60 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post