கடந்த 14 நாட்களாக நெடுந்தீவு முடக்கம் - மக்கள் பாதிப்பு - Yarl Voice கடந்த 14 நாட்களாக நெடுந்தீவு முடக்கம் - மக்கள் பாதிப்பு - Yarl Voice

கடந்த 14 நாட்களாக நெடுந்தீவு முடக்கம் - மக்கள் பாதிப்புநெடுந்தீவு கடந்த 14 நாட்களாக முடக்கம், படகுப் போக்குவரத்து இல்லை. ஆயினும் இவ் முடக்கத்திற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும் தொடர்பு இல்லை என பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ் முடக்கம் COVID-19 தொற்றுக் காரணமாக ஊர் மட்ட அமைப்புக்கள் எடுத்த முடிவின் பிரகாரம் முடக்கப்பட்டதாக நெடுந்தீவு Ds. சத்தியசோதி தெரிவித்தார்.

இதனால் இப் பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக வங்கி இயங்காமையினால் நகைகளைக் கூட அடகு வைக்க முடியாதுள்ளதாக மக்கள் குற்றச் சாட்டடுகின்றனர்

இது தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அரச அதிபரிடம் கேட்ட போது SLT தொலைத் தொடர்பு இணைய வழியில் கோளாறு காரணமாக வங்கியை இயக்க முடியவில்லையாம், குறித்த இணைய தொடர்புகள் கடற்ப்படையின் அலைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் MOD அனுமதி எடுப்பதில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post