கோப்பாய் கல்வியல் கல்லூரியில் வெளிநாட்டு கொரோனா நோயாளர் 50 பேர் அனுமதி - Yarl Voice கோப்பாய் கல்வியல் கல்லூரியில் வெளிநாட்டு கொரோனா நோயாளர் 50 பேர் அனுமதி - Yarl Voice

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் வெளிநாட்டு கொரோனா நோயாளர் 50 பேர் அனுமதி
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள பல வெளிநாட்டவர்களும் கொரோனா தாக்கத்திற்கு இலக்காகி வருகின்றனர். இவ்வாறு வெளிநாட்டவர்களும் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகி வரும் அதே நேரம் கொழும்பில் இலங்கையரும் நோய்த்தாக்கத்திற்கு இலக்காவதனால் தெற்கு வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளர்களினால் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களிற்கும் தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில்  50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஓர் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்திய தொழிலாளர்களும் கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post