யாழ் லயன்ஸ் கழகங்களினாள் மாநகரசபைக்கு கொவிட் 19 முன்பாதுகாப்பு மருத்துவ பொருட்கள் அன்பளிப்பு - Yarl Voice யாழ் லயன்ஸ் கழகங்களினாள் மாநகரசபைக்கு கொவிட் 19 முன்பாதுகாப்பு மருத்துவ பொருட்கள் அன்பளிப்பு - Yarl Voice

யாழ் லயன்ஸ் கழகங்களினாள் மாநகரசபைக்கு கொவிட் 19 முன்பாதுகாப்பு மருத்துவ பொருட்கள் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் மற்றும் தீவகம் கைட்ஸ் லயன்ஸ் கழகங்களை இணைந்து மேற்கொள்ளும் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் செயற்பாடுகளின் ஓர் அம்சமாக  யாழ் மாநகரசபைக்கு ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகளை வழங்கிவைத்தனர்.

உதவிப் பொருட்கள் யாழ்ப்பாணம் லயன்ஸ் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களினால் யாழ் மாநகர முதல்வர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மாநகர சுகாதாரப்பிரிவு மற்றும் உத்தியோகத்தர்களின் நலன் கருதி இவ் உதவியை செய்தமைக்கு மாநகரசபை சார்பில் யாழ் மாநகரின் முதல்வராக நன்றி தெரிவித்ததோடு, தங்களையும் பாதுகாத்துக் கொண்டு இது போன்ற நற்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வாழ்த்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர், உறுப்பினர்கள், யாழ் மாநர ஆணையாளர், செயலாளர், பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு பொறுப்பதிகாரிகள், மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post