முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - படையினரால் கடும் அச்சுறுத்தல் - Yarl Voice முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - படையினரால் கடும் அச்சுறுத்தல் - Yarl Voice

முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் - படையினரால் கடும் அச்சுறுத்தல்பாதுகாப்புத் தரப்பினரின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் அளம்பில் துயிலுமில்லத்தில் துப்பரவுப்பணி.

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் 20.11.2020 இன்றையநாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் அவர்கள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வருகைதந்த காவல்துறையினர்,  அங்கு துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து குறித்தபகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியிருந்தனர்.

இதேவேளை அப்பகுதிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் மற்றும், இராணுவத்தினர் அங்கு துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post