வேலணையில் வீதி அமைக்க வந்த மாகா பணியாளருக்கு கொரோனா -25 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்- - Yarl Voice வேலணையில் வீதி அமைக்க வந்த மாகா பணியாளருக்கு கொரோனா -25 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்- - Yarl Voice

வேலணையில் வீதி அமைக்க வந்த மாகா பணியாளருக்கு கொரோனா -25 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்-

வேலணையில் வீதி அமைப்பு வேலைகளில் ஈடுபட்ட மாகா கம்பனி பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  குறித்த வீதி அமைப்பு பணியில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார் தெரிவித்தார். 

மேற்படி பணியாளர் மற்றும் குடும்பங்கள் பொருட் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்த வர்த்தகர்கள், ஊழியர்கள் சிலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வேலணை - ஊர்காவற்றுறை எல்லைப்பகுதியான புளியங்கூடல் சந்தி கடைப் பிரேதசம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. 

இதேவேளை, மேற்படி மாகா பணியாளருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியோர் தொடர்பாக  021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post