தொழில் நிமித்தம் வடக்கில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice தொழில் நிமித்தம் வடக்கில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

தொழில் நிமித்தம் வடக்கில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு
தொழில் நிமித்தம் வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
 யாழ் போதனா வைத்தியசாலை 
ஆய்வுகூடத்தில்  186 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் இன்று செய்யப்பட்டது.

வட மாகாணத்துக்கு வெளியில் இருந்து தொழில் நிமித்தம் இப்பகுதிகளுக்கு வந்தவர்களில் 5  பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

கடந்த 21 ஆம் திகதி வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரோடு சாரதியாக கடமையாற்றியவர்  தனிமைப்படுத்தளில் இருந்த நிலையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தென்பகுதியில் இருந்து வீதி திருத்த வேலைக்காக வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் பகுதியிலிருந்து தொழில் நிமிர்த்தம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 3 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்..0/Post a Comment/Comments

Previous Post Next Post