670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி - Yarl Voice 670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி - Yarl Voice

670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி


ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது.

ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 

இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும்இ அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம் 5 அரைசதங்களுடன் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

மேலும் விருது பெற்றவர்கள்:

வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)

ஃபேர் பிளே விருது - ரோகித் சர்மா (மும்பை) 

கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்) 

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்டு (மும்பை)

அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)

பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட் (மும்பை)

மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

0/Post a Comment/Comments

Previous Post Next Post