அபாய கட்டத்திற்குள் இலங்கை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை - Yarl Voice அபாய கட்டத்திற்குள் இலங்கை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை - Yarl Voice

அபாய கட்டத்திற்குள் இலங்கை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை


இலங்கை தற்போது கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுவிட்டது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராசியா பெண்டிசே இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.

மக்கள் நடந்து கொள்கிற முறையிலேயே இனி பாரதூர விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பது நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபாய வலயத்தில் இலங்கை இருந்தாலும் அதிலிருந்து மீண்டெழும் இடத்தில்தான் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்தும் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post