கொரோனாவால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு - இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு - Yarl Voice கொரோனாவால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு - இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு - Yarl Voice

கொரோனாவால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு - இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்புஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இன்று (27) இருவர் உயிரிழந்துள்ளனர். 

 01. கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 87 வயது பெண்.   கடந்த  23,ஆம் திகதி  வீட்டில் இறந்தார்.     பக்கவாதம்  கொவிட் 19 உடன்  மாரடைப்பு மரணத்துக்கு காரணமாகியுள்ளது. 

02. கொழும்பு தெமட்டகொட  பகுதியில் வசிக்கும் 54 வயது பெண் ஹோமகாமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று  27 அன்று உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கொவிட் 19 மற்றும் நிமோனியா. 

03. மருதானை பகுதியில் வசிக்கும் 78 வயது பெண். வீட்டில் கடந்த 25, ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.  இறப்புக்கான காரணம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

04. கொழும்பு 15 பகுதியில் வசிக்கும் 36 வயது ஆண்.  ஐ.டி.எச் வைத்தியசாலையில்  இன்று (27) உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம்  கொவிட் 19, நாள்பட்ட நுரையீரல் நோய் பாதிப்பு.

05. கொழும்பு 02 பகுதியில் வசிக்கும் 83 வயது ஆண்.  நேற்று 26 அன்று இறந்தார். கொவிட் 19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம். 

06. கொழும்பு 10 இல் உள்ள மாலிகாவத்தை பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்.நேற்று 26 அன்று இறந்தார். நீரிழிவு நோய், நீண்டகால சிறுநீரக நோய் மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கு காரணம். 

07. கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 69 வயது நபர். கடந்த 25 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்  கொவிட் 19 தொற்றுடன், நிமோனியா, நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமா நோய். 

08. கொழும்பு  70 வயது ஆண் கைதி.  மஹசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில்  கடந்த 25,  இறந்தார். கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கடுமையான சிறுநீரக நோய்த்தொற்று  மரணத்திற்கு காரணம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post