யாழ்.சிற்றி லயன்ஸ் கழகத்தால் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு - Yarl Voice யாழ்.சிற்றி லயன்ஸ் கழகத்தால் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு - Yarl Voice

யாழ்.சிற்றி லயன்ஸ் கழகத்தால் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு




கொரோனா நெருக்கடியில் கடமையாற்றி வருகின்ற சுகாதார பணியாளர்களுக்கு யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது 

நல்லூர் பிரதேச சுகாதார பிரிவு தொண்டர்களுக்கு யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினால் ஒரு தொகுதி முக்க்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்து.

நல்லூர் சுகாதார பணிமனையில் பிரதேச சுகாதார பரிசோதகரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கடமைபுரியும் சுகாதார தொன்டர்களுக்கே இவ் முக்க் கவசம் மற்றும் தொற்று நீக்கிகள் என்பன வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்விற்கு லயன்ஸ் மாவட்ட ஆளுனரின் பிரதிப் பொருளாளர் லயன் எஸ். பாலகுமார், ஆளுனர் சபை உறுப்பினர்கள் லயன் ஜெ றஜீவன், லயன் ப.ஐங்கரன், லயன் கு.லெனின்குமார், யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரணவன், யாழ் நகர லியோ கழகத்தின் தலைவர் லயோ ஜனுசன், சிற்றிலயன்ஸ கழக உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் லயன் மதுசூதன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், தொண்டர்கள் என பலரும் பலந்தகொண்டனர்.

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஐந்தாவது பெரிய நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.






0/Post a Comment/Comments

Previous Post Next Post