வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் - எச்சரிக்கையுடன் கடிதம் அனுப்பிய தமிழரசுகட்சி - Yarl Voice வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் - எச்சரிக்கையுடன் கடிதம் அனுப்பிய தமிழரசுகட்சி - Yarl Voice

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் - எச்சரிக்கையுடன் கடிதம் அனுப்பிய தமிழரசுகட்சி



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களை கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பின் கட்சிகள் கூடி தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழரசின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இத் தீர்மானம் தொடர்பில் எழுத்து மூலமாகவும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 உள்ளுராட்சி மன்றங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களிடத்தே சில முரண்பாடுகள் ஆங்காங்கே இருக்கின்றது. குறிப்பாக வடக்கில் இருக்கக் கூடிய அனேகமான உள்ளுராட்சி மன்றங்களிலே கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் தலைவர்கள் இருந்தாலும் பல இடங்களில் எங்களுக்கு அறுதிப் பெறும்பான்மை இருக்கவில்லை. 

ஆயினும் ஏதோ ஒரு வகையில் 2018 ஆம் ஆண்டு தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் முதல் இரண்டு வருடங்களிலே வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டாலும் சட்டப்படி தொடர்ந்து தலைவர்கள் பதவி வகிப்பார்கள் என்ற நிலைப்பாடு இருந்திருந்தது. 

ஆனால் இந்த வருடம் அந்த ஏற்பாடு வலுவாக இருக்காது. இந்த வருடத்திலே வரவு செலவுத் திட்டத்தை தலைவர் அல்லது தவிசாளர் அல்லது முதல்வர் சமர்ப்பிக்கின்ற போது அது முதல் தரம் அங்கீகரிக்கப்படாமால் நிராகரிக்கப்படுமேயானால் தவிசாளரோ முதல்வரோ அந்த வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் திருதங்களைச் செய்து இரண்டாவது முறை சமர்ப்பிக்கலாம். 

அவ்வாறு சமர்பிபிக்கின்ற பொழுது அதுவும் தோற்கடிக்கப்பட்டால் சட்டப்படி தவிசாளரோ முதல்வரோ பதவியிழப்பார்கள் என்பதே இப்ப இருக்கின்ற ஏற்பாடு. இந்த நிலையில் இப்பொது கூட்டமைப்பின் உறுப்பினர்களிடத்தே இருக்கிற முரண்பாடுகளைப் பரீசிலித்து நாங்கள் ஒரு தீர்மானத்தை தெளிவாக எடுத்திருக்கிறோம். 

அதே நேரம் கட்சிகளுக்கிடையிலும் சில ஏற்பாடுகள் இருந்தது. சிலர் இராஐpனாமா செய்வதென்றும் சிலரை மாற்றறுவதென்றும் இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலைமையில் எல்லாவற்றுக்கும் பொதுவாக எந்த மாற்றங்களும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இப்பொது செய்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வரவு செலவுத் திட்ட கூட்டங்களில் கட்டாயம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்கு பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பங்கு பற்றி கட்சியின் தீர்மானத்திற்கமைய சாதகமாக வாக்களிக்க வேண்டுமென்ற கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானித்திற்கமை பணிப்புரை இப்பொழுது வழங்கப்பட்டிருக்கின்றது. 

அது எழுத்து மூலமாக வழங்கப்படவும் இருக்கின்றது. ஏனெனில் சில சமயங்களில் நீதிமன்றங்களுக்குப் போனால் தங்களுக்கு அறிவிக்கவில்லை அல்லது எழுத்து மூலமாக தரவில்லை என்று சொல்லக் கூடிய நிலைமையைக் கருத்திற்கொண்டு எழுத்து மூலமான அறிவித்தல் எல்லா உறுப்பினர்களுக்கும் எங்களுடைய கட்சியினுடைய பதில் பொதுச் செயலாளரினால் தலைவர் மாவை சேனாதிராசாவும் ஒப்பமிட்டு கூட்டமைப்பின் எல்லா உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post