யாழ். மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு - Yarl Voice யாழ். மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு - Yarl Voice

யாழ். மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடுயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் போது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 62 மாதிரிகளிலும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

அரியாலைப் பகுதியில் தனிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் இருந்து பெறப்பட்டு, யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 62 மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பி.சி.ஆர் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. 

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாதிரிகள் அனைத்திலும் கொரோனாத் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், ஆய்வு கூட முடிவுகள் நேற்று மாலை வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post