வெளியிடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்கள் உண்மைத் தகவல்களை தெரிவிப்பதில்லை - அதனாலேயே பாதிப்பு என அரச அதிபர் குற்றச்சாட்டு - Yarl Voice வெளியிடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்கள் உண்மைத் தகவல்களை தெரிவிப்பதில்லை - அதனாலேயே பாதிப்பு என அரச அதிபர் குற்றச்சாட்டு - Yarl Voice

வெளியிடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்கள் உண்மைத் தகவல்களை தெரிவிப்பதில்லை - அதனாலேயே பாதிப்பு என அரச அதிபர் குற்றச்சாட்டுவெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்கள் உண்மையான தகவல்களை  வெளியிடுவதில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குற்றம் சுமத்தியுள்ளார்

அவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவரகள் இனிமேலாவதுஉண்மையான தகவல்களை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

வேறு மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்கள் சுகாதாரத் துறையினரின் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.

குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து வருகின்றவரகள் தனிமைப்படுத்தப்படுகின்ற நடவடிக்கைகள் இங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு விடு கண்டவர்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை.

அவ்வாறு வேறு மாவட்டங்கள் அல்லது மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்கள் தமிழ் படுத்தப்பட்டாலும் அல்லது குரோன அடையாளம் காணப்பட்டாலும் அவர்கள் உண்மையான விவரங்களையோ அல்லது தகவல்கள் இடம் தெரிவிக்காத நிலையே இருக்கின்றது.

இதனால் சுகாதாரப் பகுதியினர் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக வேறு இடங்களிலிருந்து வந்து யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிலருக்கு கரோனோ தொட்டு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள அரசு அதிபர் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை பின்பற்றி அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post