ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
ஜார் அரசு அறிவுரை அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் திட்டமொனறை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கு அமைவாக மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது.
இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுளள பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இதற்கான விண்ணப்பங்கள் மக்களிடமிருந்து பேறப்பட்டிருக்கின்றன.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. குறிப்பாக நல்லூர் சாவகச்சேரி கோப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment