மன்னார் கிராம சேவகர் அடித்து கொலை - சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது - Yarl Voice மன்னார் கிராம சேவகர் அடித்து கொலை - சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது - Yarl Voice

மன்னார் கிராம சேவகர் அடித்து கொலை - சக பெண் கிராம சேவகரின் கணவர் கைதுமன்னாரில் கிராம சேவகர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்வத்தில் சந்தேகத்தின் பேரில் சக கிராம சேவகரின் கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி இலுப்பைக் கடவை ஆத்திமோட்டைப் பகுதியல் வைத்து குறித்த கிராம சேவகர் இனந்தெரியாதோரால் அடித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையிலையே பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட கிராம சேவகருடன் பணியாற்றும் சக கிராம சேவரின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post