மஞ்சல் கடத்திய 6 பேரை கடலில் வைத்து கைது செய்த கடற்படை - இந்தியாவிற்கே 4 பேர் திருப்பி அனுப்பு - 2 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் - Yarl Voice மஞ்சல் கடத்திய 6 பேரை கடலில் வைத்து கைது செய்த கடற்படை - இந்தியாவிற்கே 4 பேர் திருப்பி அனுப்பு - 2 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் - Yarl Voice

மஞ்சல் கடத்திய 6 பேரை கடலில் வைத்து கைது செய்த கடற்படை - இந்தியாவிற்கே 4 பேர் திருப்பி அனுப்பு - 2 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல்


 
இந்தியாவில் இருந்து றோளர் படகில் 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சளை கொண்டு வந்து இறக்கிய றோளர் படகும் அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து றோளர் படகில் மன்னார் அரிப்பு பகுதியில் கற்பிட்டி மீனவர்களின் படகு மூலம் மஞ்சள் இறக்கும் சமயம் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது றோளரில் இருந்த 4 இந்திய மீனவர்களும் இலங்கையை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருந்தபோதும் றோளரில் இருந்த மஞ்சள் முழுமையாக இறக்கப்பட்டு இலங்கையை சேர்ந்த இருவர் மட்டும் கைது செய்யப்பட்டபோதும் கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்கள் நால்வரும் றோளரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டது. இதேநேரம் இவர்களின் தகவலின் அடிப்படையில் கற்பிட்டிப் பகுதில் 2 ஆயிரத்து 600 கிலோ மஞ்சள் மீற்கப்பட்டுள்ளத.இவற்றின் அடிப்படையில் மொத்தம் 5 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் பைப்பற்றப்பட்டதோடு இலங்கையை சேர்ந்த இருவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தளிற்கு உட்படு்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post