யாழ் மாவட்ட அனர்த்த பிரிவிற்கு தொண்டு நிறுவனத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழ் மாவட்ட அனர்த்த பிரிவிற்கு தொண்டு நிறுவனத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழ் மாவட்ட அனர்த்த பிரிவிற்கு தொண்டு நிறுவனத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு  HUMEDICA தனியார் தொண்டு நிறுவனத்தினரால் ஐந்து வெப்பநிலை பரிசோதிக்கும் உபகரணங்கள்,மற்றும் கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமூடிகள் அடங்கிய உதவிபொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா அச்ச நிலமையில் காலநிலை தாக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களை கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு உள்ளது.

 எனவே அந்த கடமையினை  பிரிவினர் மேற் கொள்வதற்கு உதவியாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் முகமூடிகள் குறித்த நிறுவனத்தினரால் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரிய ராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post