மன்னாரிற்கு வரும் யாசகர்களை மடக்கி பிடிக்கவும் விசேட ஏற்பாடு - Yarl Voice மன்னாரிற்கு வரும் யாசகர்களை மடக்கி பிடிக்கவும் விசேட ஏற்பாடு - Yarl Voice

மன்னாரிற்கு வரும் யாசகர்களை மடக்கி பிடிக்கவும் விசேட ஏற்பாடு




மன்னார் மாவட்டத்திற்கு வாராந்தம் வியாழக் கிழமைகளில் மகியங்கனையில் இருந்து விரும் யாசகர்களை படையினர், பொலிசார் மூலம் மடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கொவிட் 19ன் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த விடயமும் தீர்மானிக்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் மகியங்கனையில் இருந்து 40ற்கும் மேற்பட்ட யாசகர்கள் காலையில் வந்திறங்கி சகல வர்த்தக நிலையங்களிற்கும் ஏறி இறங்கி யாசகம் பெற்றுச் செல்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கொரோனா அச்சம் குறைவடையும் வரையில் இச் செயலை தடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தடுப்பதற்காக வியாழக்கிழை சுகாதார அதிகாரிகள், பொலிசார், படையினரின் உதவியினையும் நாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சுகாதாரத் திணைக்களத்தினர், பொலிசார், பிரதேச செயலாளர்கள், படையினர் என சகல தரப்பினரும் பங்கு கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post