மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு - Yarl Voice மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு - Yarl Voice

மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு
யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வுகள் துயிலும் இல்லத்திற்கு முன்பாக  உள்ள பகுதியில் சில வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூறப்படவுள்ள நிலையில் குறித்த பகுதியில் இன்றையதினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிரமதான பணிகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிக்கு  காவல் துறையினர் வருகை தந்ததை அடுத்து சற்று முறுல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் திரும்பி சென்றதை அடுத்து சிரமதானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post