செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடை - வெளியில் நின்று தரிசித்த பக்தர்கள் - Yarl Voice செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடை - வெளியில் நின்று தரிசித்த பக்தர்கள் - Yarl Voice

செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடை - வெளியில் நின்று தரிசித்த பக்தர்கள்
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான இன்று பெருமளவான  அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்த போதும் வெளி வீதியில் வைத்தே சந்நிதியானை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வெளி வீதிக்குள் செல்லும் அடியார்களில் ஐந்து நபர்கள் மாத்திரம் உள்நுழைய அனுமதித்து பின்பு உள்நுழைந்த அடியார்கள் வெளியில் வந்ததும் வேறு ஐந்து நபர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரனமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறான நடைமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post