இராணுவம் மற்றும் போலீசாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் நாளில் சுடர் ஏற்றி அஞ்சலி செய்த சிவாஜிலிங்கம் - Yarl Voice இராணுவம் மற்றும் போலீசாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் நாளில் சுடர் ஏற்றி அஞ்சலி செய்த சிவாஜிலிங்கம் - Yarl Voice

இராணுவம் மற்றும் போலீசாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் நாளில் சுடர் ஏற்றி அஞ்சலி செய்த சிவாஜிலிங்கம்இராணுவம் மற்றும் போலீசாரின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது அந்த வீட்டில் பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தார் சிவாஜிலிங்கம்.

மாவீரர் நாளான இன்று பொது இடங்களிலும் பொதுக் கூட்டங்களை நடத்தியும் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதற்கமைய தமிழ்தேசிய கட்சியின் செயலாளரான எம் கே சிவாஜிலிங்கம் தனது இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மாவீரர் நாளான இன்று காலை முதல் இராணுவம் மற்றும் பொலிஸார் சிவலிங்கத்தின் இல்லம் முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மாவீரர்களுக்கு இன்று மாலை சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்த இருந்ததால் சிவாஜிலிங்கத்தின் இல்லத்தைச் சுற்றி பெருமளவு போலீசாரும் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் குவிந்திருந்தனர்.

இத்தகைய கடும் நெருக்கடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் குறித்த நேரத்தில் தனது வீட்டின் முன்பாக பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தி இருந்தார சிவாஜிலிங்கம்.

வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் அவரது இல்லம் அலுவலகம் சேர்ந்த இடத்தில்

0/Post a Comment/Comments

Previous Post Next Post