யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது - Yarl Voice யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது - Yarl Voice

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் ஆயர் இல்லம் முன்பாக மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட அருட்தந்தை ஒருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் நாளான இன்று மாலை யாழ்ப்பாணம் ஆயர் இல்லம் முன்பாக பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டதன் காரணமாகவே குறித்த அருட்தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல்களை பொது இடங்களிலும் கூட்டங்கள் கூட்டியும் நடாத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநலையிலேயே ஆயர் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முற்பட்ட அருட்தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post