கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நோய் அறிகுறிகளுடன் கிளிநொச்சி 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட 72 வயதான நபருக்கு PCR பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாரதிபுரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் பணிபுரிந்த தொண்டமான் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப் படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் வெலிகந்த சிக்ச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார்.

இதேவேளை நாளை முதல் ஒரு வாரத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post