வவுனியா வடக்கு கல்வி வலய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் - Yarl Voice வவுனியா வடக்கு கல்வி வலய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் - Yarl Voice

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றி ஒரு  கோடியே 60 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்பட்வர் மோசடி செய்த தொகை 2 கோடியே 16 லட்சம் என இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில்  முகாமைத்துவ உதவியாளராக நியமனம் பெற்ற நிலையில்  கல்வித் திணைக்களத்தின் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டபோது சம்பளத்தின் உண்மைப் பெறுமதியை உரியவர்களின் கணக்கில் வைப்புச் செய்த போதும் மேலதி கொடுப்பனவு , படி எனக் கணக்கிட்ட தொகையினை வங்கியின் ஊடாக தனது கணக்கில் வைப்புச் செய்து மோசடியில் ஈடுபட்டார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மேற்கொண்ட கணக்கு நடவடிக்கைகள் யாவும் மீளாய்விற்கு உட்படுத்தும் பணி துரிதமாக இடம்பெறுகின்றது. இதன்படி இன்றுவரை கண்டு பிடுக்க்பட்ட பெறுமதி 2 கோடியே 16 லட்சம் ரூபா என பொலிசாரிற்கு அறிக்கை சமரட்பிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பணிப்பாளரினால் இன்று காலை சமர்ப்பித்த முறைப்பாட்டு அறிக்கையிலேயே இந்தப் பெறுமதி கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post