வீட்டு முற்றத்தில் நின்ற தென்னைமரமொன்றை அரிந்து வீழ்த்திய விசமிகள் - கொக்குவிலில் சம்பவம் - Yarl Voice வீட்டு முற்றத்தில் நின்ற தென்னைமரமொன்றை அரிந்து வீழ்த்திய விசமிகள் - கொக்குவிலில் சம்பவம் - Yarl Voice

வீட்டு முற்றத்தில் நின்ற தென்னைமரமொன்றை அரிந்து வீழ்த்திய விசமிகள் - கொக்குவிலில் சம்பவம்
கொக்குவில் பூநாறிமடம் பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் நின்ற தென்னை மரம் ஒன்றை விசமிகள் இயந்திர வாளினால் அரிந்து வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பூநாறிமடம் 3வது ஒழுங்கையில் வீதியோரம் வீட்டு வளவிற்குள் நின்ற தென்னையே நேற்று அதிகாலை 12.30 மணியளவில் அரிந்து வீழ்த்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு வீழ்த்தப்பட்ட தென்னை மரம் அருகில. இருந்த மின் கம்பம் மீது சாய்ந்து மின் கம்பமும் உடைந்து வீழ்ந்ததோடு பிரதான மின் இணைப்புக் கம்பிகள் யாவும் அறுந்து வீழ்ந்துள்ளன.

இதன்போது குறித்தநாசகாரச் செயலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதன்போது வீதியோரம் இருந்த ஓர் மாத சொரூபத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சேதங்களின்போது அப் பகுதி முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு 10 மணி நேரத்தின் பின்பு 3 வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகளிற்கான மின் இணைப்பு மின்சார சபையின் நீண்ட முயற்சியினால. ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் இனைப்பு வழங்காத 3 வீடுகளிற்கும் பொலிசாரின் முறைப்பாட்டுப் பிரதி கிடைத்த பின்பே வழங்ப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த வீட்டில் கடந்த யூன் 14ஆம் திகதியும் இதேபோன்று ஓர் தென்னை விசமிகளால் இரவோடு இரவாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணை இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post