எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அஞ்சலிக்கும் உரிமையை தடுக்க முடியாது - இல்லங்களில் நினைவு கூறுமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை - Yarl Voice எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அஞ்சலிக்கும் உரிமையை தடுக்க முடியாது - இல்லங்களில் நினைவு கூறுமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை - Yarl Voice

எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அஞ்சலிக்கும் உரிமையை தடுக்க முடியாது - இல்லங்களில் நினைவு கூறுமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை


எத்தனை தடைக்கட்டளையை அரசு வித்தாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது. மக்கள் இல்லங்களில் மாலை 6.05ற்கு நினைவு கூறுமாறு கோருகின்றோம் என தமிழ் கட்சிகள கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று கூடியிருந்தனர். இதன் போதே ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில்,

2020ஆம் ஆண்டு மாவீரர் தினம் தொடர்பாக எட்டு கட்சிகள் சேர்ந்து கலந்துரையாடு எடுத்த முடிவு

மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்திகை 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் அஞ்சலித்து வந்துள்ளோம். இவ் நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு கிழக்கில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வீண்டியது எமது கடமையாகும். அதே வேளை தென்னிலங்கையில் பரிய அளவில் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தனது தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.

உலகளாவிய உயிர்கொல்லியாக தீவிரிடமடைந்திருக்கும் கொரோனா தொற்றினை பொறுத்தமட்டில் எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எம் அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்திருக்கின்றோம்.

மாவீரர் நினைவு அஞ்சலி என்பது எமது அனைவரினதும் உணர்வுகளொடு இணைந்திருக்கும் முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில். அஞ்சலி செலுத்த வேண்டிய எமது தார்மீகக் கடமையை  இதனை எந்த சூழ் நிலையிலும் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

சில வருடங்களாக அனுமதிக்கப்பட்ட இந் நிகழ்வு தொடர்பில் புதிய அரசாங்கத்தின் இவ் அனுகுமுறை ஏற்றுக் கொள்ளபட முடியாதாக அமைந்திருக்கிறது.

எத்தனை தடைக்கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், மரணித்த உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கு உள்ள அடிப்படை  உரிமையை மறுத்து நிற்க முடியாது.

இந் நிலையில் மாவீரர் நினைவேந்தல்களை தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது இல்லங்களில் இருந்தே முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். வழக்கம் போல மாலை 6.05ற்கு  தமது இல்லங்களில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு மக்களை கோருகின்றோம். என அவ் அறிக்கையில் இருந்தது.

இக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுரேஷ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐங்கரநேசன், கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post