வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு தொட்டு நிக்கல் திரவம் முகக் கவசங்கள் வழங்கிவைப்பு - Yarl Voice வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு தொட்டு நிக்கல் திரவம் முகக் கவசங்கள் வழங்கிவைப்பு - Yarl Voice

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு தொட்டு நிக்கல் திரவம் முகக் கவசங்கள் வழங்கிவைப்புபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  கடமையாற்றும் சாரதிகளுக்கு முகக்கவசம் ,தொற்று நீக்கல் திரவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது!

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட   வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளுக்கான முகக் கவசம் மற்றும் தொற்று நீக்கல் திரவம் அடங்கிய பொதி "கியூமெடிக்கா" தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் சுகாதார பணிமனை நிர்வாகத்தினரிடம்கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொண்டு நிறுவனத்தினரால் தற்போதைய  covid-19 நிலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் கடமையாற்றும் 111 அம்புலன்ஸ் மற்றும் இதர வாகன சாரதிகளுக்கான முக கவசம் மற்றும் தொற்று நீக்கி திரவம்   வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் மோகன் மற்றும்  தனியார்தொண்டு  நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post