யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்புயாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில்  யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் கடந்த தினங்களில் பெய்த அடைமழை காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு நிலையில் வாழ்ந்து வரும் தெரிவுசெய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 20 உலர்உணவு பொதிகள் கல்லுண்டாயில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது 

குறித்த நிகழ்வில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ,சூரியராஜ்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் ,மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர்   கலந்து கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post