மாவையின் நியமனம் சட்டத் தேவை - சம்பந்தனும் ஆட்சேபிக்க மாட்டார் என்கிறார் சிவஞானம் - Yarl Voice மாவையின் நியமனம் சட்டத் தேவை - சம்பந்தனும் ஆட்சேபிக்க மாட்டார் என்கிறார் சிவஞானம் - Yarl Voice

மாவையின் நியமனம் சட்டத் தேவை - சம்பந்தனும் ஆட்சேபிக்க மாட்டார் என்கிறார் சிவஞானம்


சட்டத் தேவையின் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பங்காளிக் கட்சிகளின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரமே செயலாளராக தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசாவை தெரிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள தமிழரசின் மூத்த தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியமனத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஐயாவும் ஆட்சேபிக்க மாட்டாரென்றும் ஆட்சேபிக்க வேண்டிய தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நியமனம் மற்றும் அதற்கு கட்சித் தலைவர் சம்பந்தனின் நிலைப்பாடு  குறித்தும் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்தாவது..

கூட்டமைப்பின் செயலாளர் என்பது ஒரு சட்டம் சம்மந்தப்பட்ட விடயம். அந்தச் செயலாளர் என்பது சட்ட தேவை. அதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. அப்படிப் பார்த்தால் இதுவரையில் செய்து வந்ததே தவறு. 2009 ஆம் ஆண்டில் இருந்து இந்தச் சட்டம் அமுலில் இருக்கிறது. இதில் சம்மந்தன் ஐயா ஆட்சேபிக்க மாட்டார். ஏனெனில் இது சட்ட தேவை. ஆனபடியால் செயலாளராக தற்போது மாவை சேனாதிராச நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

அதே போன்று ஒரு கூட்டமைப்பில் எத்தனை கட்சிகள் இரந்தாலும் அதில் ஒருவர் நியமிக்கப்படலாம். ; அதற்கமைய கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்ற நிலைமையில் தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராசா தற்போது அதன் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

குறிப்பாக இந்தக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்ற பொதும் அதில் செயலாளர் யார் என்ற பிரச்சனைகள் கேள்விகள் எதுவும் இல்லாமலே பங்காளிக் கட்சிகளின் இணக்கப்பாட்டோடு ஏகமனதாக தமிழரசுத் தலைவரே தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதற்கு யாரும் ஆட்சேபிக்கின்றதென்று இல்லை. 

மேலும் இது ஒரு; சட்ட ஏற்பாடு. அதாவது சட்ட பூர்வமான கடமையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நியமனம். குறிப்பாக இந்த விடயம் புதிதானபடியால் சிலருக்கு தெளிவற்ற தன்மை இருந்தது. ஆனால் ஒருமனதாக மாவை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவே நான் உடனடியாகவே சட்ட நிழல் பிரதி எடுத்து அதன் அடிப்படையில் எல்லோரும் புரிந்து கொண்டு ஒரு மனதாகவே அந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 

கூட்டமைப்பை பொறுத்தவரையில் 2001 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்த செயற்பட்டு வருகிறது. ஆனால் 2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 58 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் படி அதில் 8 ஏ என்ற பிரிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயற்படுகிறதென்றால் அந்தக் கூட்டமைப்பிலே இணைந்து கொண்டிருக்கின்ற கட்சிகளினுடைய பெயர்கள் மற்றும் பதவி வகிப்பவர்களினுடைய விபரங்களை அந்தக் கூட்டமைப்பின் செயலாளரே தேர்தல் ஆணையனத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று இந்தச் சட்டம் சொல்கின்றது. 

கடந்த 2009 ஆம் ஆண்டிலே தான் இது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சட்டம். நான் நினைக்கிறேன் இவ்வாறான ஏற்பாடுகள் இருக்கிறதென்பதை நான் மாவை சேனாதிராசாவிற்கு சொல்லி வந்திருக்கிறேன். அதன்படி தான் நேற்றையதினம் மூன்று கட்சி தலைவர்களும் இருந்த சமந்தர்ப்பத்தில் அந்த விடயம் எடுக்கப்பட்டது. இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டு முறைப்படியான ஒரு செயலாளர் நியமிக்கப்பட வேண்டி இருந்த சட்டத் தேவையின் காரணத்தினால் ஏகமனதாக தமிழரசு தலைவர் மாவை சேனாதிராவை கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. 

இது ஒரு சட்டத் தேவைக்கான ஒரு நடவடிக்கை. இதில் பெரிய பாரதூரமான விடயமாக நான் பார்க்கவில்லை. சட்டப்படி அந்தக் கடமைகளைச் செய்வதற்காக செயலாளர் சட்டப்படியான தேவை. அதற்கமைய அதனைப் பூர்த்தி செய்வதற்காக செயலாளர்  தெரிவு செய்யப்பட்டிருக்கின்றதாக அவர் மேலும் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post