கொரோனா நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்பட்டது.
கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து நாடும்.நாட்டு மக்களும்.மீண்டு வரவேண்டும் என்பதற்காக. சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம்,விசேட வழிபாடுகளை செய்யும் வண்ணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கமைவாக இன்று ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால் மாலை 4.30 மணிக்கு வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுதர்சன ஹோமமும் விசேட வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெற்றன
இந்தப் பிரார்த்தனையின் ஊடாக சகல மக்களும் நோயிலிருந்து விடுபட்டு தங்களுடைய வழமையான வாழ்க்கையை வாழ்வதற்கு இறைவனை வேண்டி குறித்த யாகம் நடத்தப்பட்டது ,
யாகத்தில் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை .
Post a Comment