யாழ் - கொழும்பு அத்தியாவசிய பொருட்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு திங்கட்கிழமை முதல் புதிய நடைமுறை - Yarl Voice யாழ் - கொழும்பு அத்தியாவசிய பொருட்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு திங்கட்கிழமை முதல் புதிய நடைமுறை - Yarl Voice

யாழ் - கொழும்பு அத்தியாவசிய பொருட்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு திங்கட்கிழமை முதல் புதிய நடைமுறை




யாழ்- கொழும்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொள்வனவுக்கென பார வூர்தியில் சென்றுவரும் சாரதி மற்றும் உதவியாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய சுகாதார நடைமுறை வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று யாழ் வர்த்தக சங்கத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் யாழ் வர்த்தக சங்க தலைவர் வ.ஜ.ச ஜெயசேகரம் தலைமையில் இடம்பெற்றது  

இது தொடர்பாக இக் கலந்துரையாடலில் பாரவூர்திகளின்  சாரதிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான புதிய சுகாதார நடைமுறைகள் பற்றி   அறிவிக்கப்பட்டது இந்த கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த  வர்த்தக சங்கத்தலைவர்  எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ் கொழும்பு பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் தங்கள் பிரதேச பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையில் தங்கள் விபரங்களை பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


அதன் படி வாகன உரிமையாளர்கள் சுகாதார பகுதியினர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கென தனியான இடம் ஒதுக்கியிருக்க வேண்டும் மற்றும் அவர்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் வீடுகளுக்கு செல்வதாயின் சுகாதார பகுதிக்கு அறிவிக்க வேண்டும். 

வாகனங்கள் சுத்திகரிக்க வேண்டும் அத்தோடு அவர்கள் கொழும்பு சென்று வரும் போது அடிக்கடி கைகளை கழுவுதலும் மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயம் மற்றும் சாரதி மற்றும் உதவியாளர்கள் தவிர எவரும் பாரவூர்திகளில் பயணிக்க தடை.

 அத்தோடு கட்டாயமாக    பாரவூர்தி சாரதிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் விபரங்களை வரும் திங்கட் கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் அவ்வாறு சமர்ப்பிக்கபாடதவர்கள் யாழ் கொழும்பு பயணம் செய்ய முடியாது.மற்றும் பயணத்தின் போது தேவையற்ற இடங்களில் நிறுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும்.

 மற்றும் யாழ் மாவட்டத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வெளிமாவட்டங்களிலிருந்து யாழுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வோர் அவர்களிடம் பழகுவதை குறைத்துக்கொள்ளவும் என்றும்குறிப்பிட்டார்.     

இக்கலந்துரையாடலில் கொழும்பிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பாரவூரதி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பொதி  கொள்வனவு செய்வோர் மற்றும் யாழ் மாநகரசபை வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்-

0/Post a Comment/Comments

Previous Post Next Post