வலி தெற்கு பிரதேச சபையின் பட்ஜெட் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் - Yarl Voice வலி தெற்கு பிரதேச சபையின் பட்ஜெட் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் - Yarl Voice

வலி தெற்கு பிரதேச சபையின் பட்ஜெட் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்




வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரவுசெலவுத்திட்டங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மயிரிழையில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் வலி தெற்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுளளது.  

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கூட்டம் இன்று காலை தவிசாளர் தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு 30 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.  

இதன்போது அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தினை தவிசாளர் சபையில் முன்வைத்ததைத்  தொடர்ந்து  பட்ஜெட் மீதான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சபையில் இருந்த 26 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டனர். 

6 உறுப்பினர்கள் மட்டும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் வலி தெற்கு பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. 

தமிழ்தேசியக் கூட்டமைப்பு 11, தமிழ்தேசிய மக்கள் முன்னணி 4, ஐக்கிய தேசியக் கட்சி 3, தமிழர் விடுதலைக் கூட்டணி 2, ஆகிய கட்சிகளின் 20 உறுப்பினர்களும் பட்ஜெட்டை ஏற்றுக்கொண்டனர். 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 4, சிறீலங்கா சுதந்திரக்கட்சி 2 ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே பட்ஜெட்டை ஆட்சேபித்தனர். 

சபையின் தவிசாளர் தர்ஷனின் ஆரோக்கியமான அரசியல் செயற்பாட்டினாலேயே பட்ஜெட் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக வலி தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post