காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீர் உயிரிழப்பு - பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை - Yarl Voice காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீர் உயிரிழப்பு - பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை - Yarl Voice

காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீர் உயிரிழப்பு - பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

பளை - புலோப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கடந்த 28ம் திகதி தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார். குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர் எனவும், 

குறித்த நபருடன் பேலியகொட மீன் சந்தைக்கு செல்லும் நண்பர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த தகவல்களை அவர் மறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post