புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவியின் வீடு தேடிச்சென்று பாராட்டிய சுமந்திரன் - Yarl Voice புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவியின் வீடு தேடிச்சென்று பாராட்டிய சுமந்திரன் - Yarl Voice

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவியின் வீடு தேடிச்சென்று பாராட்டிய சுமந்திரன்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மகாஜனாக் கல்லூரி மாணவியை நேரில் சென்று பாராட்டி வு
கௌரவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்.

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரி மாணவி 198 புள்ளிகளைப் பெற்று வடக்கில் சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவியின் வீட்டிறகு இன்று காலை நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாணவிக்கு மாலை அணிவித்து பாராட்டினார்.

இதன் போது அந்த மாணவியின் பெற்றோர்கள் உடனும கலந்துரையாடினார். குறித்த மாணவியின் இல்லத்திற்கு எம்பி சந்திரனுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் கரிகரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post