இந்தியா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்த இணக்கம் - Yarl Voice இந்தியா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்த இணக்கம் - Yarl Voice

இந்தியா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்த இணக்கம்


இந்தியா- சீனா இடையே ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா படையினரைக் குவித்தமையினால் எழுந்த பதற்றத்தைத் தணிக்கஇ கடந்த  ஏப்ரல் மாதம் முதல் வெவ்வேறு நாட்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை எட்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை சுசுல் என்னுமிடத்தில் இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றது.

குறித்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்இ லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியாஇ சீனாவுக்கு இதன்போது  வலியுறுத்தியுள்ளது.

மேலும்இ மே மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டை எல்லைக்கு கொண்டு வந்தால்தான் அமைதியும் பரஸ்பர நம்பிக்கையும் சாத்தியமாகும் என இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் குறித்த பேச்சுவார்த்தைஇ எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையிலேயே ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post