விஐய்யின் அடுத்த பட இயக்குனர் தொடர்பில் வெளியாகிய தகவல் - Yarl Voice விஐய்யின் அடுத்த பட இயக்குனர் தொடர்பில் வெளியாகிய தகவல் - Yarl Voice

விஐய்யின் அடுத்த பட இயக்குனர் தொடர்பில் வெளியாகிய தகவல்


தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியீட்டுக்கு தயாராவுள்ள போதும் கொரோனா நெருக்கடி காரணமாக அதனை வெளியிட முடியாத நிலையில் படக்குழு உள்ளது. தற்சமயம் தியேட்டர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திறக்கவுள்ளதால் விரைவில் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையில் மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாஸ்டர் பட இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இது குறித்த 'கிரீன் சிக்னல்' ஒன்றை அண்மைய அவரது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மாஸ்டருக்கு அடுத்து விஜய் யாருடன் ஒன்று சேர்வார் என்ற எதிர்பார்ப்பு தான் இப்பொழுது மேலோங்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸூடன் இணைவார் என்ற பேச்சு அடிபட்டாலும் தற்சமயம் இவர்கள் இணையமாட்டார்கள் என்ற செய்தியே வெளிவந்துள்ளது.

இந்நிலையில்இ விஜய்யின் அடுத்த இயக்குனர் யார்? என்பது தான் இப்போது பரவலான தேடலாக உள்ளது. மகிழ் திருமேனி சுதா கொங்கரா என பல இயக்குனர்கள் வரிசையில் இருந்தாலும் சிவகார்த்திகேயனை வைத்து 'டொக்டர்' திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் விஜய்யை இயக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காமெடி கலந்த குடும்பக் கதையொன்றை அவர் விஜய்க்கு சொல்லியதாகவும் அது விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. எல்லாம் சரியாக அமைந்தால் இருவரும் சேரும் நாள் தொலைவில் இல்லை. நெல்சன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கோலமாவு கோகிலா' என்ற வெற்றிப்படத்தை இயக்கியவராவார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post