யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _ - Yarl Voice யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _ - Yarl Voice

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில்  400 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.

வட மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.


இன்றைய பரிசோதனையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் 25ஆம் திகதி தொடக்கம் சுய தனிமைப்படுத்தல் இல் இருக்கின்ற காரைநகர் சேர்ந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவர்களுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டது. குறிப்பிட்ட நிலையத்திற்கு பாரவூர்தி மூலம் நீரைக் கொண்டு வந்த சாரதி ஒருவர் தனிமைப்படுத்தளில் இருந்த நிலையில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டார்கள்.

ஏனையவர்களுக்கு  தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post