கிளிநொச்சியில் இன்றும் ஒருவருக்கு கொரோனா உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice கிளிநொச்சியில் இன்றும் ஒருவருக்கு கொரோனா உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

கிளிநொச்சியில் இன்றும் ஒருவருக்கு கொரோனா உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி



கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 337 பேருக்கு Covid-19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

இதில் பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது மணமுடித்து ஜெயபுரத்தில் இருந்தாலும் தொழில்வாய்ப்பு நிமித்தமாக கொழும்பில் இருப்பவர். 

கடந்த மாதம் 25ம் திகதியன்று ஜெயபுரம் தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்.  வீடு திரும்பிய நாளில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post