கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார் - Yarl Voice கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார் - Yarl Voice

கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் இன்றைய தினம் கார்த்திகை வீளக்கிடு வழிபாட்டினை செய்யக்கூடாது என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலயங்களுக்கு நேரில் சென்று நிர்வாகத்தினரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார். 

இன்றையதினம் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வான கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படுகின்றது.  

இந்நிலையில்  இன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் உட்பட்ட இந்து ஆலயங்களுக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தற்காலிக பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ஜெயந்த என்ற அதிகாரி வீளக்கீட்டு பூஜையினை செய்யமுடியாதென்றும் மீறீ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். 

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளனர். 

 இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் தலையீட்டினையடுத்து ஆலயங்களில் விளக்கீடு வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து அண்மையில் தற்காலிக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜெயந்த என்ற குறித்த அதிகாரியின் இனவாதப் போக்கால் மக்கள் கடும் அச்சநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post