யாழ் குடாநாடு முடக்கபடாது - மாகாண சுகாதார திணைக்களம் அறிவிப்பு - Yarl Voice யாழ் குடாநாடு முடக்கபடாது - மாகாண சுகாதார திணைக்களம் அறிவிப்பு - Yarl Voice

யாழ் குடாநாடு முடக்கபடாது - மாகாண சுகாதார திணைக்களம் அறிவிப்பு
கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு  எவ்வித தகவலையும் வழங்காமல்;, சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காத காரைநகரைசேர்ந்த ஒருவருக்கு Pஊசு
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளதைத் 
தொடர்ந்து அவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை 
மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இதனால் யாழ் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் 
அனைத்தும் தவறானவை. 

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் 
காரைநகரைச் சேர்ந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேரும் உள்ளடங்குவர். 

இவர்களுக்கு செய்யப்படும் Pஊசு பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும் முடக்கப்படும்.

 இதனால் யாழ் மாவட்டம் முழுவதும் முடக்கப்படுவது 
தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.
;வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post