இந்தியாவை 36 ஓட்டங்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா - Yarl Voice இந்தியாவை 36 ஓட்டங்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா - Yarl Voice

இந்தியாவை 36 ஓட்டங்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா




ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடி பெரும் வரலாற்றுப் பிழையை செய்து விட்டது. 

இதுவரை 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் மூலம் 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் மோசமான சாதனையை படைத்திருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களை மட்டுமே எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு இன்னின்ஸில் இந்தியா எடுத்த மிகக் குறைவான ரன்களாக இது பதிவாகியிருக்கிறது. 

இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் மிகக்குறைந்த இன்னிங்ஸ் ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post